இளம்பெண் திடீர் மரணம் போலீசார் விசாரணை

கூடலூர், ஜன. 6: இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (60). இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஜனனி திருமணம் முடித்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராஜா தனது இளைய மகள் ஜனார்த்தனியுடன் (34) வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தபோது ஜனார்த்தினி திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு ஜனார்த்தனியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: