வாலிபரிடம் செல்போன் பறிப்பு

தேனி, ஜன. 10: தேனி அருகே பழனிசெட்டிபட்டி லட்சுமி நகரில் குடியிருப்பவர் குமரன் மகன் நவீன் கிஷோர் (27). நேற்று முன்தினம் மாலையில் பழனிசெட்டிபட்டி ஜவகர் நகரில் உள்ள கருப்புசாமி கோயில் அருகே நவீன் செல்போனில் பேசியபடி நடந்த சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் நவீன் கிஷோர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்து நவீன் கிஷோர் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Related Stories: