ஆண்டிபட்டி, ஜன.7: ஆண்டிபட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் சட்டவிரோதமான போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார்(25), டி.புதூர் கிராமத்தை சேர்ந்த ரித்திக்(23) என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள், புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணையில், இவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, அதனை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
