வருசநாடு, ஜன. 12: வருசநாடு ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில்தெரு ஓம் சக்தி கோவில் தெரு ஆறாவது வார்டு, ஏழாவது வார்டு பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே புதிய ரேஷன் கடை ஏழாவது வார்டு பகுதியில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தெரு மக்களுக்கு தேவையான குடிநீர் மேல்நிலைத் தொட்டியும் மற்றும் புதிய ரேஷன் கடையும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில வருடங்களாகவே மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் பொருள் வாங்கி செல்கின்ற பொழுது மிகவும் கூட்ட நெரிசில் சிக்கி தவிக்கிறார்கள். எனவே எங்கள் ஏழாவது வார்டு பகுதிக்கு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
