ஜன.16ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

 

தேனி, ஜன. 14: தேனி மாவட்டத்தில் வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது .தமிழக அரசு வருகிற 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் (பார்கள்) மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.

எனவே, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், தனியார் மதுபான கூடங்கள் (பார்கள்) எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ) மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் வருகிற 16 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 16-ம் தேதி விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கடை பணியாளர்கள் மற்றும் உரிமைதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ,தெரிவித்துள்ளார்.

Related Stories: