புதிய விஏஓ அலுவலகம் தேவை

வருசநாடு, ஜன. 12: ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டு கிராமத்தில் வருவாய்துறைக்கு சொந்தமான மேகமலை விஏஓ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கண்டமனூர், எட்டப்பராஜபுரம், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த விஏஓ அலுவலகத்தை சார்ந்துள்ளனர். இந்த அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது சிதிலமடைந்துள்ளது.

மழை பெய்தால் கட்டிடத்தின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்படுகிறது. கட்டிடத்தின் சுவர்களும் பல இடங்களில் விரிசல்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே கடமலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி அடிப்படை வசதிகளுடன் புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Related Stories: