வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு

சாத்தான்குளம், ஜன.28: சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் சேகரகுருவாக தாமஸ் ரவிக்குமார் (46) உள்ளார். இவர்  ஆலய வளாகத்தில்  உள்ள குடியிருப்பு வீட்டில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இவர் நேற்று பேய்க்குளத்தில் உள்ள ஆலயத்தில் ஜெபம் நடத்த சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பியபோது அவர் வீட்டு கதவு உடைக்கப்பட்டு  கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்து 3 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. மற்ற பொருள்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து சேகரகுரு தாமஸ் ரவிக்குமார் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: