தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும் மையமான வஉசி பொறியியல் கல்லூரியை சுற்றி ஜூன் 4 வரை டிரோன் பறக்க தடை

தூத்துக்குடி, மே 1: தூத்துக்குடி மக்களவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வஉசி பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆவணங்கள், தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு அனைத்து வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் டிரோன்கள் பறப்பதைத் தடை செய்ய அறிவுரை வரப்பெற்றுள்ள காரணத்தினால் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு சிவப்பு மண்டலமாக அறிவித்து இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த தடையை மீறும்பட்சத்தில் உரிய விதிகளின் கீழ் காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும் மையமான வஉசி பொறியியல் கல்லூரியை சுற்றி ஜூன் 4 வரை டிரோன் பறக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: