குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

உடன்குடி,ஜன.23: எஸ்டிபிஐ கட்சியின் திருச்செந்தூர் தொகுதி தலைவர் தாஹிர், கிளைச்செயலர்கள் அபுல்ஹசன், அலாவுதீன், அபுல்ஹாசிம், ஹாஜா ஆகியோர் குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ணப்பிரியாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும், தசரா உள்ளிட்ட  திருவிழாக்களில் பல லட்சம் பேர் வந்து செல்லும் குலசேகரன்பட்டினத்துக்கு நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், 8வது வார்டு கொத்துவா பள்ளி வடக்குத்தெருவில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும், 11வது வார்டு காதரியா புலவர் அப்பா பள்ளிவாசல் அருகில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காதரியா சன்னதி தெரு, பாரதிநகர் தெருக்களில் சாலை பராமரிப்பை புதுப்பிக்க வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய நியாயவிலைக்கடைகளை அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: