விளையாட்டு போட்டி பரிசளிப்பு

சாத்தான்குளம், ஜன.22: வெங்கடேஸ்வரபுரத்தில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசு வழங்கப்பட்டது.  சாத்தான்குளம் அருகே  வெங்கடேஸ்வரபுரத்தில் நேருயுவகேந்திரா மற்றும்  தெற்கு  பேய்க்குளம்  தாமரை மகளிர் மன்றம் இனைந்து இளையோர் மன்றங்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும்  இளையோர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும்  விழா நடந்தது. துத்துக்குடி நேரு  யுவகேந்திரா இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வெங்கடேஸ்வரபுரம்  முன்னாள் கிராம ஊராட்சி உறுப்பினர் சுந்தரம்  முன்னிலை வகித்தார். தாமரை மகளிர்  மன்ற தலைவி சுப்புலெட்சுமி  வரவேற்றார். இதில் வெங்கடேஸ்வரபுரம் கிராம ஊராட்சி துனைதலைவர் சுந்தராஜ், கருங்கடல்  கிராம ஊராட்சி உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் பேசினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சாத்தான்குளம் எஸ்.ஐ செல்வின்ராஜ், பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில்  சமூக ஆர்வலர்கள்  பாண்டியன், மூர்த்தி, முருகன், கணேசன்  மற்றும் மன்ற நிர்வாகிகள் வெயிலி, காசி ராணி, தேவி, உமா  உள்ளிட்ட  உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள்  கலந்துகொண்டனர். மன்ற செயலாளர் நந்தவாணி நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: