அசோகபுரம் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

பெ.நா.பாளையம், டிச.29:கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர் அசோக்குமார் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக இரு சக்கர வாகனம், ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மூலம் ஊராட்சி முழுவதும் பேரணியாக சென்றனர். என்.ஜி.ஜி.ஓ. காலனி நால் ரோட்டில் பிரசாரத்தை முடித்து அவர் பேசுகையில், ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்,  இனி வரும் நாட்களில் ஆம்புலன்ஸ் முதல் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும், ஊராட்சி முழுவதும் தினமும் குப்பை எடுத்து தூய்மை பகுதியாக மாற்றிடவும், அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் உதய சூரியன் சின்னத்திலும், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் காந்திமதிக்கு கை சின்னத்திலும் வாக்கு சேகரித்தனர். மாநகராட்சி முன்னாள் மேயர் காலனி வெங்கடாலம், முன்னாள் ஊராட்சி தலைவர் மனோகரன், தலைமை செயற்க்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட அவை தலைவர் கணேச மூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுதாவிமலன், உட்பட பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.