கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டிற்குள் செல்லும் வாகனங்களுக்கான நுழைவு கட்டண விலை பட்டியலை வைக்க வேண்டும் என கடை வியாபாரிகள் நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில், கடை வியாபாரி செல்லத்துரை முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் ராஜாராமிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்; கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டிற்கு உள்ளே செல்லும் டாடா ஏசி, ஆட்டோ, வேன், லாரி மற்றும் கனரக வாகனங்களுக்கு நகராட்சி நிர்ணயித்த விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை. இதனால் நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வாகனங்களிடம் வசூல் செய்ய வேண்டும்.