பட்டுக்கோட்டை, நவ. 26: பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், என்.பி.சிற்றரசு ஆகியோரின் தந்தையான திமுக முதுபெறும் முன்னோடியுமான பழனிவேலன் திருஉருவ படத்திறப்பு நிகழ்ச்சி பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது.தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்பியுமான எல்.கணேசன், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், மாநில திமுக விவசாய அணி அமைப்பாளர் விஜயன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், மதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்று பழனிவேலன் திருவுருவ படத்தை திறந்து வைத்து பேசினார்.