வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை திருப்புறம்பியம் முத்துமாரியம்மன், அய்யனார் கோயில் திருவிழா

 

கும்பகோணம், மே29:கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் முத்துமாரியம்மன், அய்யனார் கோயில் கோடாபிஷேக விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் கோயிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்பாளுக்கு பால்அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும் நடைபெற்றது. தொடர்ந்து நாதஸ்வர மேள வாத்தியம் முழங்க, வானவேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது.

The post வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை திருப்புறம்பியம் முத்துமாரியம்மன், அய்யனார் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: