கல்லணைக்கால்வாய் அருகில் இருக்கும் அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்

திருக்காட்டுப்பள்ளி,மே26: திருக்காட்டுப் பள்ளி அருகே தோகூர் காமராஜர் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக்கூட்டம் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சக்திவேல், மார்கிரேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பாஸ்கர், பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தோகூரிலிருந்து சர்க்கார் பாளையம் வழியாக திருச்சிக்கு செல்லும் சாலை சுமார் 2 கிமீ தொலைவிற்கு எவ்வித வாகனமும் செல்ல முடியாத அளவில் தார் சாலை குண்டும், குறியுமாக உள்ளதை மழைக்காலம் துவங்கும் முன் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும், கல்லணை சுற்றுலா தளமாக உள்ளதால் அங்குவரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் அப்பகுதி பொதுமக்களின் வசதிக்காகவும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தரவேண்டும், தோகூர் செல்லும் வழியில் கல்லணைக் கால்வாய் அருகில் இருக்கும் அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்றிடவும், குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கல்லணைக்கால்வாய் அருகில் இருக்கும் அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: