பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 1.83 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி

 

கும்பகோணம், மே 30: கும்பகோணம் அருகே பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாலைகள் பணி உள்பட மொத்தம் ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் பாலகணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் ஒன்றியத்தில் கோபுராஜபுரம் ஊராட்சி இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கட்டிட அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிட பணிகளை தரமாகவும், விரைந்தும் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சம்மந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

அதேபோல் பாபநாசம் ஒன்றியம் கோபுரராஜபுரம் ஊராட்சியில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் நிதி ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடம் ஆக மொத்தம் ரூ.01 கோடியே 83 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

The post பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 1.83 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி appeared first on Dinakaran.

Related Stories: