உசிலம்பட்டி வேளாண் கல்லூரியில் ரத்ததான முகாம்

திருக்காட்டுப்பள்ளி, மே26: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் பாலயப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட உசிலம்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி இயக்குனர்மருத்துவர்.பாண்டியராஜன் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மருத்துவர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைமருத்துவர்.சிந்தியா தலைமையில் மருத்துவ குழுவினர் 28 நபர்களிடம் ரத்ததானம் பெற்றனர். முகாமில் கல்லூரி என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர்மருத்துவர்.பிரசாந்த், மருத்துவர்.கரிமானிஷா, பாலயப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கிருத்திகா, சுகாதார ஆய்வாளர்கள் ராமநாதன், சரவணபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post உசிலம்பட்டி வேளாண் கல்லூரியில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: