தஞ்சாவூர் சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

தஞ்சாவூர், மே 27: தஞ்சாவூரில் சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ரோடு ஆர்எம்எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 24 ம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால வேள்வியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று நேற்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, விமான கோபுர கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்றனர்.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சந்தோஷி அம்மன், ஆக்ஞா கணபதி, மற்றும் பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருக்கயிலாய கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் 28வது குரு மகா சன்னிதானம் ல மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

The post தஞ்சாவூர் சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: