பூச்சாத்தனூர் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

 

கும்பகோணம், மே 30: கும்பகோணம் அருகே பூச்சாத்தனூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, பூச்சாத்தனூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறும். இவ்வாண்டும் தீமிதி விழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக பத்து நாட்கள் விரதம் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குதல் எனும் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மஞ்சள் நீராட்டு விடையாற்றியுடன் விழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள், கிராமவாசிகள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post பூச்சாத்தனூர் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: