விடுமுறை தினத்தையொட்டி திருக்காட்டுப்பள்ளி கொள்ளிடம் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் கருடசேவை

 

தஞ்சாவூர், மே 27: தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் கருட சேவை 29ம் தேதி நடக்கிறது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்,  ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் 90ம் ஆண்டு 25 பெருமாள்கள் கருட சேவை விழா வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நண்பகல் 12 மணிஅளவில் வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெறும். பின்னர், வெண்ணாற்றங்கரையில் இருந்து 29ம் தேதி காலை 6 மணி அளவில் திவ்யதேச பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை தஞ்சாவூர் கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் 25 பெருமாள்கள் கருடவாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

இதில் 25 கோயில்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி ராஜவீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 30ம் தேதி காலை நவநீத சேவை நடக்கிறது. இதில், வெண்ணாற்றங்கரையில் 30ம் தேதி காலை 6மணிக்கு புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடை பெறும். இதில் 16 கோயில்களில் இருந்து பெருமாள்கள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் 31ம் தேதி காலை 9 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

The post விடுமுறை தினத்தையொட்டி திருக்காட்டுப்பள்ளி கொள்ளிடம் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் கருடசேவை appeared first on Dinakaran.

Related Stories: