கும்பகோணம் அருகே குட்கா புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல் வைப்பு

 

கும்பகோணம், மே 31: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் சரகத்திற்குட்பட்ட சோழன்மாளிகை, தேனாம்படுகையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்தையா ஆகியோர் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சோழன்மாளிகையைச் சேர்ந்த அமானுல்லா, முகமதுபாரூக், தேனாம்படுகையை சேர்ந்த ரவிச்சந்திரன், பன்னீர் ஆகிய 4 பேர்களின் கடைகளுக்கு சீல் வைத்து, தலா ரூ.25 ஆயிரம் என ரூ.1 லட்சம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்.

The post கும்பகோணம் அருகே குட்கா புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: