தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு கலந்துரையாடல்

 

தஞ்சாவூர்,மே29: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு கலந்துரையாடல் 31ம் தேதி நடக்கிறது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக அலுவலர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் மைய நூலகத்தில் தினந்தோறும் 460 மாணவ- மாணவிகள் வந்து போட்டி தேர்விற்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்விற்கு மட்டும் 223 மாணவ- மாணவிகள் பயிற்சி பெற்று வருவதுடன், இவர்களுக்கு தேவையான வினா- விடை அடங்கிய தொகுப்புகள் மற்றும் நூல்களும் கொடுக்கப்பட்டு படித்து வருகின்றனர்.

இதற்காக மாவட்ட மைய நூலகம் சார்பில் கடந்த மூன்று மாதமாக வாரந்தோறும் மாதிரிதேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 31ம் தேதி காலை 10 மணிக்கு குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: