உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

தூத்துக்குடி, நவ. 14: தூத்துக்குடி  மாவட்டத்தில்  உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 6 இன்ஸ்பெக்டர்களை பணியிட  மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி  பிரவீன்குமார் அபிநபு உத்தரவு  பிறப்பித்துள்ளார். இதன்படி வைகுண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி, மாசார்பட்டி காவல் நிலையத்திற்கும், சிப்காட்  இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மணியாச்சி காவல் நிலையத்திற்கும்  மாற்றப்பட்டுள்ளனர். மணியாச்சி இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி  புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட முதலாவது குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கும்,  மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தூத்துக்குடி மாவட்ட  குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளார். நெல்லை வணிகவியல் குற்றவியல் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த இருநாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் 7 எஸ்ஐகள் பணியிட  மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>