தொடக்கக்கல்வி பட்டய தேர்வு ஹால் டிக்கெட்டுகள் இன்று முதல் பதிவிறக்கம்

தூத்துக்குடி, ஜூன் 7: தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்றோ பூபாலராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தின் அறிவிப்பின்படி ஜூன் 2019 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் 2ம் ஆண்டு தேர்வு வரும் 14 முதல் 28ம் தேதி வரையிலும், முதலாமாண்டு தேர்வு வரும் 15 முதல் 29ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. தேர்வுகளில் பங்கேற்க உள்ள தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித்திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து இன்று (7ம் தேதி) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தோன்றும்DEE EXAM JUNE 2019 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD என்பதை CLICK செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: