சாத்தான்குளம், மே 14: சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் 17ம்தேதி வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 30,31ம்தேதி 2நாள்கள் நடக்கிறது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தீபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது. சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரியில் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்ப படிவம் மே 17ம்தேதி மாலை 3மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அன்று மாலை 5மணி வரை பெறப்படும்.