குப்புச்சிபாளையத்தில் எரியாத தெருவிளக்கை சீரமைக்க கோரிக்கை

திருச்செங்கோடு, மாரச் 26: திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் குப்புச்சிபாளையம் கிராமத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தின் முன்புறம்,  பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்கு  வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக,  இந்த தெருவிளக்கு எரியவில்லை. தவிர, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள் பல முறை புகார் கூறியும், எந்தவித  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இரவில் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். கோடை காலம் என்பதால், தாமதமின்றி தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: