கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்செங்கோடு, ஜூன் 25: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன், கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் மற்றும் ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் சென்னை தலைவர் அன்பு ரத்னவேல், நிறுவனத் துணைத்தலைவர் மஞ்சு ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் கூறுகையில், ‘இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, மாணவர்களின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது,’ என்றார். அப்போது, துணை முதல்வர்கள் நந்தகுமார், ரேவதி மற்றும் மின்னணுவியல் துணைத்தலைவர் கௌரிசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: