₹8.85 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோடு, ஜூன் 20: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி ஏலம், ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் பிடி ரகம் குவிண்டால் ₹6269 முதல் ₹8000 வரை விற்பனையானது. இதில் 93 மூட்டை பருத்தி ₹2.20 லட்சத்திற்கு ஏலம் போனது. எள் 100 மூட்டை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் கருப்பு எள் கிலோ ₹113.50 முதல் ₹136.70 வரையும், சிவப்பு எள் ₹118.40 முதல் ₹141.90 வரையும், வெள்ளை எள் ₹105.40 முதல் ₹251.50 வரை ஏலம் போனது. இதில் எள் ₹6.65 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் மொத்தம் எள், பருத்தி ₹8.85லட்சத்திற்கு ஏலம் போனது.

The post ₹8.85 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: