₹1.20 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு, ஜூன் 23: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில், நேற்று மஞ்சள் விற்பனை ஏலம் மூலம் நடைபெற்றது. மஞ்சளை மூட்டைகளாகக் கட்டி ஜேடர்பாளையம் சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி பாசூர், அந்தியூர், துறையூர் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தனி வாகனங்களில் கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் குவிண்டால் ₹14,012 முதல் ₹18,759 வரையிலும், கிழங்கு மஞ்சள் ₹13,112 முதல் ₹16,219 வரையிலும், பனங்காளி ₹15,000 முதல் ₹22,869 வரை விற்பனையானது. மொத்தம் 1405 மூட்டைகள் ₹1.20 கோடிக்கு விற்பனையானது.

The post ₹1.20 கோடிக்கு மஞ்சள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: