எக்ஸல் மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

குமாரபாளையம், ஜூன் 26: குமாரபாளையம் எக்ஸல் மருந்தியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு வாலண்டரி ரத்த வங்கி -ஆராய்ச்சி நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து ரத்த தான முகாம்கள், அதனை சார்ந்த ஆராய்ச்சிகள் நடத்த உள்ளன. இந்நிகழ்ச்சியில் எக்ஸல் மருந்தியல் கல்லூரி மாணவர்களின் ரத்த தான முகாமானது கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமையப்பெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 5 பேராசிரியர் கலந்து கொண்டனர். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் பேராசிரியர் ஏ.கே. நடேசன், துணைத்தலைவர் மதன் கார்த்திக் ஆகியோரின் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எக்ஸல் மருந்தியல் கல்லூரி முதல்வர் மணிவண்ணன் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு வாலண்டரி ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் வெங்கடாசலம் ரத்த தானத்தில் ஏற்படக்கூடிய இடர்பாடுகள், அதை கலைய மாணவ மாணவிகளின் பங்குகளை எடுத்துரைத்தார். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கல்லூரிக்கு நினைவு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

The post எக்ஸல் மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: