கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண்

நாமக்கல், ஜூன் 21: நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் மற்றும் விற்பனை செய்வோர் குறித்து, பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை வாட்ஸ் அப் எண் வெளியிட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனை எங்காவது நடைபெற்றால், அது பற்றி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். 88383- 52334 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த எண், எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். தகவல் அளிப்பவரின் பெயர், விபரம் பாதுகாக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண் appeared first on Dinakaran.

Related Stories: