புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரம்

சேந்தமங்கலம், ஜூன் 24: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு, குடிநீர் விநியோகம் செய்ய புதிய பைப் லைன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேந்தமங்கலம் ஒன்றியம் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய, கொல்லிமலை அடிவாரம் கருவாட்டு ஆற்றில் இருந்து கிணறு அமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, நிலத்தடி நீர் தொட்டி மூலம் தண்ணீர் நிரப்பி மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலை அடிவாரம் பகுதியில் இருந்து, குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருவதால், அடிக்கடி குடிநீர் குழாய்கள் பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அரசு புதிய குடிநீர் குழாய் அமைக்க ₹6கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொல்லிமலை அடிவாரம் கருவாட்டு ஆற்றில் இருந்து குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு பெற்று, அமைக்கப்பட்ட புதிய குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: