நரிகளிடம் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்

மல்லசமுத்திரம், ஜூன் 21: திருச்செங்கோடு தாலுகாவில், நேற்று முன்தினம், தமிழக முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், மல்லசமுத்திரம் அருகே அத்தப்பம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர், கலெக்டர் உமாவிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மல்லசமுத்திரம் அருகே, கொளங்கொண்டை பஞ்சாயத்து அத்தப்பம்பட்டி பகுதியில் வசித்து வருகிறேன்.

10 ஏக்கர் விவசாயநிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருகிறேன். தோட்டத்தில் ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறேன். கோழிகளை நரிகள் அடிக்கடி கடித்து குதறி சேதப்படுத்தியுள்ளது. கடந்த 17ம் தேதி காலை 7 மணிக்கு, 3 நரிகளை பார்த்தேன். எனவே, நரிகள் மீண்டும் கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்காமல் இருக்க, தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post நரிகளிடம் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: