ஆட்டோ மோதி வாலிபர் பலி

சேந்தமங்கலம், ஜூன் 22: எருமப்பட்டி அடுத்த காவக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சதீஷ்குமார் (23), இன்னும் திருமணம் ஆகவில்லை. விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, தனது டூவீலரில் காவக்காரன்பட்டியிலிருந்து, ஈச்சவாரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது விராலிப்பட்டி அருகில் அரளிப்பள்ளம் என்ற இடத்தில், எதிரே வெங்காய லோடு ஏற்றி வந்த மினி ஆட்டோ, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார், படுகாயம் அடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோ மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: