2018-19ம் ஆண்டில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித்ெதாகை விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, மார்ச் 8: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 2018- 19ம் கல்வியாண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு 1.7.2017 முதல் 30.6.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் விளையாட்டு துறையில் வெற்றிப்பெற்று தகுதியும், திறனுடைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

குழுப்போட்டிகளாக இருப்பின் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்களாக கருதப்படுவர். எனவே வரும் 12ம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in)  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட பிரிவு அலுவலக தொலைபேசி எண் 04362 235633 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: