லாரிகள் வேலை நிறுத்தத்தால் திப்பம்பட்டி சந்தையில் மாடுகள் தேக்கம்

பொள்ளாச்சி, ஜன. 9: பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது பல்வேறு மாவட்டங்களிலிருந்தும். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளிலிருந்தும் விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்படுகிறது. சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் எதிரொலியாக, பொள்ளாச்சி சந்தைக்கு வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டுவந்து விற்பனை செய்ய திடீரென தடைசெய்யப்பட்டது.  கோமாரி நோய் அச்சம் காரணத்தால்  கடந்த மாதம்  31ம் தேதி வரை நகராட்சி இடத்தில் செயல்பட்ட மாட்டு சந்தை மூடப்பட்டது. பின், இந்த மாதத்தில் 1ம் தேதி முதல், மாடு விற்பனை மீண்டும் துவங்கியது. இருப்பினும், அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் போட்டி சந்தை உருவானதால், நகராட்சி சந்தைக்கு மாடுகள் வரத்து மிகவும் குறைவானது.  மேலும், அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தமானது.

 இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கத்தினர்  வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பால், பொள்ளாச்சியில் நேற்று நடந்த சந்தை நாளில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் வரத்து நின்றுபோனது.

 கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து மட்டும் சரக்கு ஆட்டோ மூலம் சொற்ப அளவிலான மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனால், பொள்ளாச்சி மாட்டு சந்தையில் மாடுகள் மிக மிக குறைந்து வெறிச்சோடியது. ஆனால், திப்பம்பட்டியில் உள்ள போட்டி மாட்டு சந்தைக்கு நேற்று, முன்தினமே லாரிகளில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

ஆனால் நேற்று கேரளாவுக்கு லாரி இயக்காததால், திப்பம்பட்டி சந்தையில் மாடுகளின் விற்பனை மந்தமாகி  தேக்கமடைந்தது. இருப்பினும், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சில விவசாயிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர். அதிலும், பொங்கல் பண்டிகை நெருங்குவதால், விவசாயிகள் சிலர் காளை மற்றும் பசு மாடுகளை வாங்கி, சரக்கு வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.