காவேரிப்பட்டணத்தில் டெங்கு விழிப்புணர்வு

காவேரிப்பட்டணம், நவ.22:  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த எர்ரஅள்ளி பஞ்சாயத்து அண்ணாநகர், ஸ்ரீராமுலு நகர், வேலன் நகர், விஎஸ்கே நகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சுகாதார தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை உதவி திட்ட அலுவலர் (ஊராட்சிகள்) உமா செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தார். தொடர்ந்து  வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பொதுமக்களிடம், தங்கள் வீடுகளை சுற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் உருவாகாத  வகையில் பராமரித்து உரிய முறையில் மேல் மூடி அமைப்பதோடு, சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் மற்றும் தொற்று நோய் உள்ள நிலையில் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் ஆய்வின்போது நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சையத்பயாஸ்அகமது, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அக்ரோ தலைவர் விக்ரம்குமார், சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமரன், ஊராட்சி செயலாளர் சக்திவேல் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆறுமுகம், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Related Stories: