திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தேன்கனிக்கோட்டை, ஜூன்5: நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுக 40க்கு 40 என அமோக வெற்றி பெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் கோபிநாத் அமோக வெற்றி பெற்றார். இதையொட்டி, தேன்கனிக்கோட்டையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமையில், பழைய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். அதே போல் தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டையிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

The post திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: