கர்நாடக மதுபானம் விற்ற இருவர் கைது

சூளகிரி, ஜூன் 8: சூளகிரி ஒன்றியம், பேரிகை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கே.என்.தொட்டி கிராமத்தில், கர்நாடக மதுவை கடத்தி வந்து, வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக, பேரிகை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தப்பா(66) என்பவரது வீட்டில் இருந்த ₹12ஆயிரம் மதிப்பிலான கர்நாடக மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த தேன்கனிக்கோட்டை அருகே ஆரேப்பளியை சேர்ந்த அன்னையப்பா மகன் வேணு(19) என்பவரையும் கைது செய்து, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

The post கர்நாடக மதுபானம் விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: