உலக சுற்றுச்சூழல் தினவிழா

கிருஷ்ணகிரி, ஜூன் 6: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். விழாவில், பள்ளி துணை ஆய்வாளர் சுதாகர், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் பாதுகாத்தலின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் காத்தலின் அவசியம் பற்றியும், பிளாஸ்டிக் தவிர்ப்பு, மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு, மரக்கன்றுகள் நடுதல், கருத்தரங்கம், மஞ்சப்பை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேந்தன் முன்னிலை வகித்தார். அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், 300 மாணவியர் பங்கேற்றனர்.

The post உலக சுற்றுச்சூழல் தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: