குடும்ப தகராறில் தொழிலாளி மாயம்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 7: தேன்கனிக்கோட்டை அருகே உச்சனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தனர் முரளி (41). கூலி தொழிலாளி. இவருக்கு மஞ்சுளா (33) மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு எற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சமாதானம் ஆகியுள்ளனர். நேற்று காலை தேன்கனிக்கோட்டைக்கு சென்ற முரளி, மஞ்சுளாவிற்கு போன் செய்து குழந்தைகளை பார்த்துக்கொள் என கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார். பின்னர் மஞ்சுளா போன் செய்த போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்த பல இடங்களில் தேடியும் முரளி கிடைக்கவில்லை. இதையடுத்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.

Related Stories: