வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பொன்னமராவதி, நவ.1: பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். பொன்னமராவதி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதல் பருவத்தில் மாணவர்கள் அடைவுநிலை, பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரிப்பு, பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துதல், பள்ளியில் புரவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியன பள்ளி மேலாண்மைக் குழுவினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Related Stories: