புதுக்கோட்டையில் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி மகோத்சவம்

 

புதுக்கோட்டை, மே27: புதுக்கோட்டை லட்சுமி நரசிம்ம ஜெயந்தி அறக்கட்டளை சார்பில் 105வது ஆண்டு லட்சுமி நரசிம்ம ஜெயந்தி மகோத்சவம் நிறைவடைந்தது. புதுக்கோட்டை கீழ3ம் வீதியில் உள்ள நரசிம்ம ஜெயந்தி மண்டபத்தில் ஆண்டுதோறும் ஜெயந்திமகோத்சவம் நடைபெறும். இந்நிலையில் 105வது ஜெயந்தி மகோத்சவம், கடந்த 22ம் தேதி தொடங்கியது. லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான சீதா கல்யாண உற்சவம் கடந்த 24ம் தேதி நடைபெற்றது.

சனிக்கிழமை அகண்ட ராம வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து நிறைவு நாளான நேற்று பாகவதர் பூஜை ஆராதனைகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் இருந்தும் இந்த விழாவில் பாகவதர்கள் பங்கேற்று பஜன் பாடல்களைப் பாடி ஆராதனை நடத்தினர்.விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம ஜெயந்தி அறக்கட்டளை நிர்வாகி நரசிம்மன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post புதுக்கோட்டையில் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி மகோத்சவம் appeared first on Dinakaran.

Related Stories: