புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டம் புதுக்கோட்டையில் மாதர் சங்க முன்னணி ஊழியர்களுக்கான பயிலரங்கம்

 

புதுக்கோட்டை, மே 31: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட முன்னணி ஊழியர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் புதுக்கோட்டை ஆர்,கே. நினைவகத்தில் நேற்று நடைபெற்றது. பயிரங்கத்திற்கு சங்கதின் மாவட்டத் தலைவர் பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். ‘பெண்ணியத்தைப் போற்றுவோம்! பேண்ணுரிமை பாதுகாப்போம்!” என்ற தலைப்பில் எழுத்தாளர் கவிவர்மன், ‘ஸ்தாபனம்’ என்ற தலைப்பில் சங்கத்தின் மாநிலன்குழு உறுப்பினர் கலைச்செல்வி, ‘இந்திய வரலாற்றில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் சிஐடியு மாநில செயலாளர் தர் ஆகியோர் பேசினர்.

மாவட்டக்குழு முடிவுகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சுசிலா பேசினார். மாவட்டப் பொருளாளர் வைகைராணி நன்றி கூறினார். மாவட்ட துணைச் செயலாளர் கவிதா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டம் புதுக்கோட்டையில் மாதர் சங்க முன்னணி ஊழியர்களுக்கான பயிலரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: