புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

 

புதுக்கோட்டை,மே 28: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில்களில் தேரோட்டத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 12-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 19ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பிறகு மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. இந்நிலையில், முக்கியத் திருவிழாவான தேரோட்டத்தையொட்டி சப்பரத்தில் பேச்சி அம்மனும், சிறிய தேரில் வாழவந்த பிள்ளையாரும், பெரிய தேரில் முத்துமாரியம்மனும் எழுந்தருளல் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

The post புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: