பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் கந்தர்வகோட்டையில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

கந்தர்வகோட்டை,மே 31: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள ஆபத்சகேஸ்வரர் உடனுறை அமராவதி அம்மன் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி ஆபிஷேக ஆராதனை நடைபெற்றது. முதலில் காலபைரவருக்கு எண்ணை காப்பு செய்து திரவிய தூள், மஞ்சள் தூள், பால், தயிர், அரிசி மாவு, தேன், பன்னீர் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது பூசி,சிகப்பு நிற புது வாஸ்திரம் உடுத்தி,அரளி மலர்களை கொண்டு அலங்காரம் செய்து,நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து இறையருள் பெற்று கொண்டனர். மேலும் பக்தர்கள் தேங்காய் மூடி, பூசணிக்காய், பாகற்காய் இவற்றில் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம், சுண்டல், கேசரி பிரசாதம் மாக வழங்கினார்.

The post பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் கந்தர்வகோட்டையில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: