திருமயம் அருகே தாழ்வாக தொங்கும் மின் கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்

திருமயம், அக்.30: திருமயம் அருகே தாழ்வாக தொங்கும் மின் கம்பியால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் ஊராட்சி இடையாநத்தம் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட அஞ்சுகின்றனர். இதனிடையே ஒரு சில இடங்களில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியை அப்பகுதி மக்கள் கம்பிகள் கொண்டு உயர்த்தியுள்ளனர். இதனால் மழை காலங்களில் மின் கம்பியை தாங்கியுள்ள கம்பங்கள் ஈரமாவதால் கம்பத்தில்  மின்சாரம் பாய்ந்து அருகே நடமாடும் பொதுமக்கள், கால்நடைகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன்னர் இடையாநத்தம் பகுதியில் தாழ்வாக தொங்கும் மின் கம்பியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: