திருச்செந்தூரில் பெண் திடீர் சாவு

திருச்செந்தூர், ஆக.13: நெல்லை மாவட்டம், ஆலங்குளம், நெட்டூரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(45). கேரளாவில் ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சக்திராணி(35). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். சக்திராணி குடும்பத்தோடு ஒரு வேனில் ஆடி அமாவாசை விழாவுக்காக திருச்செந்தூருக்கு வந்தார். அங்கு கடலில் நீராடி விட்டு அனைவரும் உடை மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது சக்திராணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.    இதுகுறித்து திருச்செந்தூர் திருக்கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஷாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முத்தையாபுரம் பகுதியில் பல்லாங்குழியாக மாறிய சாலை

ஸ்பிக்நகர், ஆக.13: முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் 7 ஆண்டுகளுக்கு முன்னர் உருக்குலைந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.தூத்துக்குடி 52வது வார்டுக்கு உட்பட்ட முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையானது பராமரிப்பின்றி உருக்குலைந்த நிலையில் உள்ளது. சாலையில் உள்ள கற்கள் முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இச்சாலை வழியே செல்லும் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்களின் சைக்கிள்,  இருசக்கர வாகனங்களின் டயர்களை கற்கள் பதம் பார்க்கின்றன.

ேமலும் இந்த சாலையில் தெருவிளக்குகள் எதுவும் இரவு நேரங்களில் சரியாக எரியாத காரணத்தினால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.  போக்குவரத்துக்கு லாயக்கற்று குண்டும் குழியுமாக சாலையினை பயன்படுத்தும் போது மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உருக்குலைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க முன்வரவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: