பொதுஆண்டுக்கு முன், பின் என அச்சடிப்பு பாடத்திட்ட புத்தகங்களில் கிமு, கிபி என மாற்ற வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

நாகர்கோவில், ஜூலை 1:  அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை தலைவர் தியோடர் சேம் தலைமையில் போதகர்கள் ஈபன்டைட்டஸ், கிங்சிலி ஜேக்கப், சார்லஸ், கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை மாவட்ட தலைவர் பீட்டர், செயலாளர் சாலமன், மேற்கு மாவட்ட தலைவர் ஈசாக், மேல்புறம் வட்டார செயலாளர் அகில்குமார், தலைவர் ராபி, மாநில இளைஞரணி செயலாளர் விக்டர்பிரின்ஸ், மகளிரணி தங்கம், ஆகியோர் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கி.பி.முதலாம் ஆண்டு தொடங்கி தற்ேபாதுள்ள 2018ம் ஆண்டு வரையுள்ள அளவீடை குறிப்பதற்கு பாடத்திட்டமாக இருந்தாலும் ,அனைத்து வரலாற்று சிறப்புகளையும் குறிப்பிடுவதாக இருந்தாலும் கி.மு, கி.பி என்றுதான் ஆண்டுகள் கணிக்கப்படுகிறது. இப்படி நாடு முழுவதும் கடைபிடிக்கும் வழக்கத்தை, தற்போது தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களில் மாற்றி பொது ஆண்டுக்கு முன் பொது ஆண்டுக்கு பின் என்று குறிப்பிட்டிருப்பது, ஒரு வரலாற்றுபிழை ஏற்பட வழிவகுக்கிறது.  எனவே புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள பொது ஆண்டுக்கு பின் பொது ஆண்டுக்கு முன் என்பதை திருத்தம் செய்து முன்பு இருந்ததைபோன்றே கிமு, கிபி என்ற வளக்கத்தினை கொண்டுவரவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: