அடைக்காக்குழி ஊராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் தர்ணா

நித்திரவிளை, பிப்.21: அடைக்காக்குழி ஊராட்சிக்குட்பட்ட செங்கவிளை பீலிக்குளம் சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டதை கண்டித்தும், ஜல் ஜீவன் திட்டத்தில் கட்டப்பட்ட 3 குடிநீர் திட்ட நீர் தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததை கண்டித்தும், அடைக்காகுழி ஊராட்சியில் தெருவிளக்குகள் எரியாததை கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றியதை கண்டித்தும் அடைக்காக்குழி ஊராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அடைக்காகுழி வட்டாரக்குழு உறுப்பினர் லெனின் தலைமை தாங்கினார். வட்டாரக்குழு உறுப்பினர்கள் மதுசூதனன், கெப்சி மேரி, சேம் செல்வின், உஷாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி துவக்கி வைத்தார். வட்டாரச்செயலாளர் ரெஜி, மாவட்டக்குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா பாய், வட்டாரக்குழு உறுப்பினர் ஜெஸ்டின்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன் முடித்து வைத்து பேசினார்.

Related Stories: